கண்ணை நம்பாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Kannai Nambathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

—BGM—

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

—BGM—

ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…

—BGM—

ஆண் : காவலரே வேஷமிட்டால்…
கள்வர்களும் வேற்றுருவில்…
கண்முன்னே தோணுவது சாத்தியமே…

ஆண் : காத்திருந்து கள்வர்க்கு…
கை விலங்கு பூட்டி விடும்…
கண்ணுக்கு தோணாத சத்தியமே…

ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…

—BGM—

ஆண் : போடும் பொய் திரையை…
கிழித்து விடும் காலம்…
புரியும் அப்போது மெய்யான கோலம்…

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…
உண்மை இல்லாதது…

—BGM—

ஆண் : ஓம் முருகா என்று சொல்லி…
உச்சரிக்கும் சாமிகளே…
ருத்ராச்ச பூனைகளாய் வாழுறீங்க…

ஆண் : சீமான்கள் போர்வையிலே…
சாமான்ய மக்களையே…
ஏமாற்றி கொண்டாட்டம் போடுறீங்க…

ஆண் : பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை…
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை…

ஆண் : கண்ணை நம்பாதே…

—BGM—

ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…

—BGM—

ஆண் : பொன் பொருளை கண்டவுடன்…
வந்த வழி மறந்து விட்டு…
கண்மூடி போகிறவர் போகட்டுமே…

ஆண் : என் மனதை நான் அறிவேன்…
என் உறவை நான் மறவேன்…
எதுவான போதிலும் ஆகட்டுமே…

ஆண் : நன்றி மறவாத நல்ல மனம் போதும்…
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்…

ஆண் : கண்ணை நம்பாதே…
உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும்…
நீ காணும் தோற்றம்…
உண்மை இல்லாதது…

ஆண் : அறிவை நீ நம்பு…
உள்ளம் தெளிவாகும்…
அடையாளம் காட்டும்…
பொய்யே சொல்லாதது…

—BGM—


Notes : Kannai Nambathey Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by A. Maruthakasi. கண்ணை நம்பாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading