ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி & பி.வசந்தாகே.வி.மகாதேவன்வசந்த மாளிகை

Oru Kinnathai Song Lyrics in Tamil


ஆண் : ஏன்… ஏன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு…
கயல் நடமாட…
அவள் மையல் உறவாட…

ஆண் : இரு பக்கத்திலே சிலர்…
பட்டு முகத்தினர்…
தொட்டு விளையாட…
கை கட்டு வளையாட… ஹா ஹா…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள்…
சிக்கிடும் மீன்மட்டுமே…
இதன் தேவைகள் வாழட்டுமே… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

BGM

பெண் : ஆஆஆ… கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்…
கட்டி முடிந்ததடா…
அதில் கட்டில் அமைந்ததடா…

ஆண் : கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை…
இன்ப சக்கரம் சுத்துதடா… ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா… ஹே ஹே…

ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…

ஆண் : டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… லா லா லா…
டா டா டா… லா லா லா…
ஆ ஆ ஆ… ஓ ஓ ஓ…
ஆ ஆ ஆ… ம் ம் ம்…
ஆ ஆ ஆ… ஓ ஹோ…


Notes : Oru Kinnathai Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பாடல் வரிகள்.


Scroll to Top