யாருக்காக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி.மகாதேவன்வசந்த மாளிகை

Yarukkaga Song Lyrics in Tamil


ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
காதலே போ போ…
சாதலே வா வா…

BGM

ஆண் : மரணம் என்னும் தூது வந்தது…
அது மங்கை என்னும் வடிவில் வந்தது…
மரணம் என்னும் தூது வந்தது…
அது மங்கை என்னும் வடிவில் வந்தது…

ஆண் : சொர்கமாக நான் நினைத்தது…
இன்று நரகமாக மாறிவிட்டது…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…

BGM

ஆண் : மலரைதானே நான் பறித்தது…
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது…
உறவைதானே நான் நினைத்தது…
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது…

BGM

ஆண் : எழுதுங்கள் என் கல்லறையில்…
அவள் இரக்கமில்லாதவள் என்று…
பாடுங்கள் என் கல்லறையில்…
இவன் பைத்தியக்காரன் என்று…

ஆண் : கண்கள் தீட்டும் காதல் என்பது…
அது கண்ணில் நீரை வர வழைப்பது…
பெண்கள் காட்டும் அன்பு என்பது…
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது…

ஆண் : யாருக்காக…

BGM

ஆண் : எங்கிருந்து சொந்தம் வந்தது…
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது…
எங்கிருந்து சொந்தம் வந்தது…
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது…

ஆண் : அங்கிருந்து ஆட்டுகின்றவன்…
தினம் ஆடுகின்ற நாடகம் இது…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…

ஆண் : யாருக்காக…
இது யாருக்காக…
யாருக்காக… யாருக்காக…


Notes : Yarukkaga Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. யாருக்காக பாடல் வரிகள்.


Scroll to Top