மயக்கமென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாகே.வி. மகாதேவன்வசந்த மாளிகை

Mayakkam Enna Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…

ஆண் : மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…

ஆண் : தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…

பெண் : கற்பனையில் வரும் கதைகளிலே…
நான் கேட்டதுண்டு கண்ணா…
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே…
நினைத்ததில்லை கண்ணா…

—BGM—

ஆண் : தேர் போலே ஒரு பொன்னூஞ்சல்…
அதில் தேவதை போலே நீ ஆட…

பெண் : பூவாடை வரும் மேனியிலே…
உன் புன்னகை இதழ்கள் விளையாட…

ஆண் : கார்காலம் என விரிந்த கூந்தல்…
கன்னத்தின் மீதே கோலமிட…

பெண் : கை வளையும் மை விழியும்…
கட்டி அணைத்து கவி பாட…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஹா…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…

—BGM—

ஆண் : பாடி வரும் வண்ண நீரோடை…
உன்னை பாத பூஜை செய்து வர…

பெண் : ஓடி வரும் அந்த ஓடையிலே…
உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர…

ஆண் : மல்லிகை காற்று மெல்லிடை மீது…
மந்திரம் போட்டு தாலாட்ட…

பெண் : வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்த…
வண்ண இதழ் உன்னை நீராட்ட…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…

—BGM—

ஆண் : அன்னத்தை தொட்ட கைகளினால்…
மது கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்…

பெண் : கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து…
மது அருந்தாமல் விடமாட்டேன்…

ஆண் : உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்…
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்…

பெண் : உன் உள்ளம் இருப்பது என்னிடமே…
அதை உயிர் போனாலும் தர மாட்டேன்…

ஆண் : மயக்கமென்ன…
பெண் : ஆஹா…
ஆண் : இந்த மௌனம் என்ன…
பெண் : ஆஆஆ…
ஆண் : மணி மாளிகைதான் கண்ணே…
பெண் : ஆஆஆ…

ஆண் : தயக்கமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : இந்த சலனமென்ன…
பெண் : ஆஹாஹா…
ஆண் : அன்பு காணிக்கைதான் கண்ணே…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
பெண் : ஆஹாஹா ஹாஆ…


Notes : Mayakkam Enna Song Lyrics in Tamil. This Song from Vasantha Maligai (1972). Song Lyrics penned by Kannadasan. மயக்கமென்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading