என் மன வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன்இளையராஜாகாசி

En Mana Vaanil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

—BGM—

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

—BGM—

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…

ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

—BGM—

ஆண் : இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…

ஆண் : நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…

ஆண் : மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…

ஆண் : ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

—BGM—

ஆண் : பொருளுக்காய் பாட்டை சொன்னால்…
பொருளற்ற பாட்டே ஆகும்…
பாடினேன் அதை நாளும் நாளும்…

ஆண் : பொருளில்லா பாட்டானாலும்…
பொருளையே போட்டு செல்வார்…
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்…

ஆண் : மனமுள்ளோர் என்னை பார்ப்பார்…
மனதினால் அவரை பார்ப்பேன்…
மறந்திடா ராகம் இதுதானே…

ஆண் : வாழ்க்கை எனும் மேடைதனில்…
நாடகங்கள் ஓராயிரம்…
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…

ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…


Notes : En Mana Vaanil Song Lyrics in Tamil. This Song from Kasi (2001). Song Lyrics penned by Mu. Metha. என் மன வானில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading