பூ மழை தூவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Poomazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

—BGM—

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

BGM

ஆண் : கச்சேரி மேளங்கள்…
வேடிக்கை வானங்கள்…
ஊரெங்கும் கொண்டாட்டமா…

ஆண் : உன்னை கண்டோர்கள் கண் பட்டு…
போகின்ற எழிலோடு…
சிங்கார தேரோட்டமா…

ஆண் : தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள…
முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : வென் சங்கு கழுத்தோடு…
பொன் மாலை அசைந்தாட…
நான் கண்ட பொருள் கூறவா…

BGM

ஆண் : என் அண்ணாவை ஒரு நாளும்…
என் அண்ணாவை ஒரு நாளும்…
என் உள்ளம் மறவாது…
என்றாடும் விதமல்லவா…

ஆண் : நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே…
என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

BGM

ஆண் : கால் பட்ட இடம் எல்லாம் மலர் ஆக…
கைப்பட்ட பொருள் எல்லாம் பொன் ஆகணும்…

BGM

ஆண் : உன் கண்பட்டு வழிகின்ற நீர் எல்லாம்…
ஆனந்தக் கண்ணீரே என்றாகணும்…
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ…
அதை பார்க்கின்ற என் உள்ளம் தாயாக…

ஆண் : பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…

ஆண் : எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

BGM


Notes : Poomazhai Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by Pulamaipithan. பூ மழை தூவி பாடல் வரிகள்.


Scroll to Top