ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்நினைத்ததை முடிப்பவன்

Oruvar Meethu Song Lyrics in Tamil


ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

பெண் : ஆடலாம்… பாடலாம்…

BGM

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

BGM

ஆண் : சொட்டு தேனை போல்…
சொல்லும் வார்த்தைகள்…
பட்டு பூவை போல்…
பார்க்கும் பார்வைகள்…

ஆண் : ஆஆ… சொட்டு தேனை போல்…
சொல்லும் வார்த்தைகள்…
பட்டு பூவை போல்…
பார்க்கும் பார்வைகள்…

ஆண் : சொர்கம் தேடி செல்லட்டும்…
ஆசை எண்ணங்கள்…
அங்கெல்லாம் பொங்கட்டும்…
காதல் வெள்ளங்கள்…

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

BGM

பெண் : சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்…
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்…
ஆஆ… சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள்…
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்…

பெண் : தங்க பாவை அங்கங்கள்…
உங்கள் சொந்தங்கள்…
தத்தை போல் மெத்தை மேல்…
ஏந்தி கொள்ளுங்கள்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்…

BGM

ஆண் : கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்…
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்…
ஆஆ… கட்டு காவல்கள் விட்டு செல்லட்டும்…
கன்னி பெண் என்னை பின்னி கொள்ளட்டும்…

பெண் : மையல் பாதி என்னோடு…
மீதம் உன்னோடு…
மையல் பாதி என்னோடு…
மீதம் உன்னோடு…
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு…

ஆண் : ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து…
ஓடம் போலே ஆடலாம்… ஆடலாம்…

பெண் : ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு…
பாடல் நூறு பாடலாம்… பாடலாம்… பாடலாம்…


Notes : Oruvar Meethu Song Lyrics in Tamil. This Song from Ninaithadhai Mudippavan (1975). Song Lyrics penned by Vaali. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading