உன்னை கொடு என்னை தருவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பி.உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்உன்னை கொடு என்னை தருவேன்

Unnai Kodu Ennai Tharuven Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இதுதான் காதலடி…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
இதுவும் காதலடி…

ஆண் : தாலாட்டை கேட்காத…
ஒரு ஜீவன் நானம்மா…
தாயாகி நான் பாட…
சேயாகி கேளம்மா…
தாளம் பூவே…
என் தோள் சாயம்மா…

பெண் : என்னை தந்து…
உன்னை பெறுவேன்…
காதல் இதுதானே…
தன்னை தந்து…
கனவை பெறுவேன்…
காதல் இதுதானே…

—BGM—

ஆண் : உந்தன் பேரை…
எந்தன் பேனா எழுதும் போது…
வலிக்காமல் அன்பே நான் எழுதுவேன்…

பெண் : உயிரே உந்தன் கண்கள்…
காணும் கனவில் கூட…
நான் வந்து தாலாட்டு பாடுவேன்…
ஆண் : என் நிழலை யாரும்…
தான் மிதித்து போக விட மாட்டாய்…

பெண் : என்னை கிள்ள எனக்கேதான்…
சம்மதங்கள் தர மாட்டாய்…

ஆண் : மூக்குத்தி நீ குத்தாதடி…
என் கண்மணி…
அந்த வலி கூட…
என்னை தாக்குமே…

பெண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
காதல் இது தானே…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
காதல் இதுதானே…

—BGM—

பெண் : வெயில் காலம் வந்தால்…
கண்ணின் இமைகள் ரெண்டை…
உனக்காக குடையாக மாற்றுவேன்…

ஆண் : காற்றில் தூசும் வந்து…
உந்தன் கண்ணில் பட்டால்…
பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்…

பெண் : எந்தன் வீட்டு தோட்டத்தில்…
நடந்து வந்த பூகம்பம்…

ஆண் : பூகம்பத்தின் பின்னாலும்…
பூமி மெல்ல பூ பூக்கும்…

பெண் : கரை ரெண்டுமே காணாத…
ஓர் நீரோடை நான்…

ஆண் : அணைக்கும் அணைக்கட்டு…
நான் ஆகிறேன்…

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இதுதான் காதலடி…
கண்ணீர் கொடு…
புன்னகை தருவேன்…
இதுவும் காதலடி…

பெண் : ஆண் ஒருவன்…
தாயான அதிசயத்தை பார்த்தேனே…
காதலியை தாலாட்டும்…
காதலனை கண்டேனே…
எந்தன் ஆயுள் ரேகை…
உன் கையிலே…

ஆண் : உன்னை கொடு…
என்னை தருவேன்…
இது தான் காதலடி…

பெண் : என்னை தந்து…
உன்னை பெறுவேன்…
காதல் இது தானே…

—BGM—


Notes : Unnai Kodu Ennai Tharuven Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Pa Vijay. உன்னை கொடு என்னை தருவேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading