இதயத்தை காணவில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜசேகர்உன்னை கொடு என்னை தருவேன்

Idhayathai Kanavillai Song Lyrics in Tamil


ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று…
மண்ணில் இரங்கி வந்ததுவோ…
மங்கை அவளது மந்திரக்கண்கள்…
சந்திர சூரியன் ஆனதுவோ…

ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு…
திருகாணி ஆனது மனசு மனசு…
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு…
அவள் பாத கொலுசொலி கேட்கும் போது…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

ஆண் : சிட்டுக்குருவியின் சிறகு வாங்கி…
அட பறக்கணும் போல இருக்கு…
வெட்டுக்கிளியின் கால்கள் வாங்கி…
அட குதிக்கணும் போல இருக்கு…
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே…
இது உண்மை தானே…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பௌர்ணமி நிலவை…
மிக அருகினில் பார்த்தேன்…
பரவச கடலில்…
நான் படகாய் ஆனேன்…

BGM

ஆண் : தேவதை கண்ணில்…
இரு தூண்டிலை பார்த்தேன்…
மாட்டிய மீனாய்…
நான் ஆனேன் ஆனேன்…

ஆண் : பல்லவன் உளிகள் கூடி…
செதுக்கிய சிலை தானா…
பிரம்மன் சிலையை பார்த்து…
ஜீவனை கொடுத்தானா…
தீண்டாமல் திருட சொன்னானா…
என்னை இன்று…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM

ஆண் : ஒரு மைல் தூரம்…
இது காதல் கடிதம்…
அவளுக்கு எழுதி…
நான் அஞ்சல் சேர்ப்பேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இனி அவள் முத்தம்
அது சேமித்து வைக்க…
என்னுடல் முழுதும்…
நான் உதடுகள் கேட்டேன்…

ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி…
சாவியை தொலைத்தாளே…
பூக்களின் தொட்டிலில் போட்டு…
லாலிகள் படித்தாளே…
பாறை மீது பூவாய் பூத்தாளே…
என்னில் இன்று…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

ஆண் : சிட்டுக்குருவியின் சிறகு வாங்கி…
அட பறக்கணும் போல இருக்கு…
வெட்டுக்கிளியின் கால்கள் வாங்கி…
அட குதிக்கணும் போல இருக்கு…
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே…
இது உண்மை தானே…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM


Notes : Idhayathai Kanavillai Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Ilayakamban . இதயத்தை காணவில்லை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading