உன் பதில் வேண்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சித்தார்த் & ஸ்ருதி எஸ்யுவன் ஷங்கர் ராஜாதரமணி

Unn Badhil Vendi Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன் பதில் வேண்டி…
யுகம் பல தாண்டி…
உன்மத்தம் கொண்டே காத்திருப்பேனோ…

ஆண் : உன்னிரு பார்வை விழுகின்ற தொலைவில்…
வாழ்கின்ற யோகம் நானடைவேனோ…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாற தருகிறாய்…
தருகிறாய் நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்…
புலன் ஐந்தையும் கொல்கிறாய்…
கொல்கிறாய் நீ…

BGM

ஆண் : உனக்காக நானும் கடல் தாண்டி போவேன்…
மலைமேலொரு கடல் வேண்டுமா மழைக்கொண்டு செய்வேன்…
கடல் நீளம் சேர்த்து கனவள்ளி கோர்த்து…
என் மூச்சினை நூலாக்கியே நகை ஒன்று செய்வேன்…

ஆண் : யாரும் நம்பாத கதைகள்…
நீ சொல்லு பெண்ணே நிஜம் ஆக்கி வைப்பேன்…
வேறாரும் எங்கும் இல்லாத பூமி…
பார்க்காத வானம் நாம் வாழ போவோம்…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்…
தருகிறாய் நீ…

ஆண் : இளைப்பாறல் முடிந்ததும் போதும் போ என்கிறாய்…
புலன் ஐந்தையும் கொல்கிறாய்…
கொல்கிறாய் நீ…

BGM

பெண் : வருகின்ற காற்றில் புதிதான வாசம்…
நொடி நேரத்தில் எனை மாற்றியே மாயங்கள் செய்தாய்…
எதிர் பார்த்த எல்லாம் கைவிட்டு போக…
பொய் என்பதா மெய் என்பதா கை நீட்டி வந்தாய்…

பெண் : காணல் நீரோடுதானே மீன் தேடிதானே…
நான் இன்று போனேன்…

ஆண் : குறை ஒன்றுமில்லை பிறைமீதும் கரைகள்…
உண்டென்று சொல்லி நீ இங்கு வந்தாய்…

ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்…
நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்…
தருகிறாய் நீ…

பெண் : விடியாதொரு நாளிலே அடடா என் வானிலே…
வெளிச்சம் போல் வருகிறாய் வாழ்க்கையே நீ…


Notes : Unn Badhil Vendi Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. உன் பதில் வேண்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading