பாவங்களை சேர்த்துக்கொண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்முகேஷ், செந்தில்தாஸ் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதரமணி

Pavangalai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்…
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம்…

குழு : என்னை மன்னிபாயா யா அல்லாஹ்…
மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லாஹ்…
இல்லை சோதிப்பாயா யா அல்லாஹ்…
நீயே கூறு அல்லாஹ்…

குழு : அல்ரகுமானே அல்ரஹிமின்…
நீதான் யா அல்லாஹ்…
நீ தான் யா அல்லாஹ்…

—BGM—

ஆண் : உயிரை நீ படைத்தது எதற்கு…
இதயமதில் துடிப்பது எதற்கு…
உன்னைத் தொழுது கேட்கிறேனே…
பாவங்களை அழிப்பவன் நீதானே…

ஆண் : உறக்கமில்லை இறக்கம் காட்டு…
இல்லை என் வலிகளை ஆற்று…
தவறு செய்தேன் தவறி செய்தேன்…
கருணையாலன் நீதான் அல்லாஹ்…

ஆண் : பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்…
நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம்…

குழு : என்னை மண்ணிப்பாயா யா அல்லாஹ்… ஓ…

—BGM—

ஆண் : நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும்…
குற்றம் கொல்கிறதே…
என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள்…
ஏதோ சொல்கிறதே…

ஆண் : நீ இருக்கும் இடந்தான் எது அல்லாஹ்…
அது மண்ணிக்கும் மனமே யா அல்லாஹ்…

குழு : வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன்…
யா அல்லாஹ்…
உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன்…
எல்லாம் நீ அல்லாஹ்…
எல்லாம் நீ அல்லாஹ்…

குழு : லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா…

ஆண் : இறைவா உன் இறக்கத்தினாலே…
ஈரமுடன் இருக்குது பூமி…
எரிந்து முடிந்த விளக்கில் இன்று…
வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே…

ஆண் : நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து…
கருணையுடன் வெப்பத்தைக்கடத்து…
உனது அடிமை எங்கு போவேன்…
இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லாஹ்…

குழு : காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன்…
என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன்…

குழு : லாயில்லாஹா யில்லல்லா…
லாயில்லாஹா யில்லல்லா…
முகம்மது ரசூலல்லா…
சல்லல்லா ஹூலலைவசல்லம்…
முகம்மது ரசூலல்லா…
சல்லல்லாஹூ லலைவசல்லம்…
சல்லல்லாஹூ லலைவசல்லம்…
யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்…


Notes : Pavangalai Song Lyrics in Tamil. This Song from Taramani (2017). Song Lyrics penned by Na Muthukumar. பாவங்களை சேர்த்துக்கொண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading