உணவே மருந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ரஞ்சன் & காயத்ரிசந்தோஷ் நாராயணன்சர்வர் சுந்தரம் (2017)

Unavey Marundhu Song Lyrics in Tamil


BGM

பெண் : உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து…

பெண் : இலையோடு சுடு சோறு படும்போது நார் சத்து…
செயற்கை இலை போட்டு நஞ்சாக்கினோம்…

பெண் : கொதிக்காத காய் தின்று கிளி பூனை தெம்பாச்சு…
அறியாமல் அறிவை நாம் ஐந்து ஆக்கினோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கைக்குத்தல் அரிசிக்குள் கருவாகும் ஊட்டம்…
இயந்திரத்தில் தீட்டி கரு வறுக்கிறோம்…

பெண் : பாலுக்குள் பதமாக பயிராகும் புரதம்…
அதிவேகம் சூடேற்றி அதை அழிக்கிறோம்…

பெண் : உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து…
மருந்தே நம் விருந்து…

BGM

பெண் : பழங்காலம் முதலாக இலைப்போட்டு நாமும்…
பலகாரம் வைத்தோமே அதில் அர்த்தம் உண்டு…

பெண் : நெய்யும் பருப்பும் முதலாக உள் சென்று…
உணவுக் குழாய்வரை தன்மையாக்கும்…

பெண் : ருசிக்காக உண்டவை செறிக்காத மற்றவை…
இரசம் ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும்…

பெண் : கருணைக்கிழங்காலே கொழுப்பை கரைக்கிறோம்…
சாப்பிட்ட சூட்டையே மோரிட்டு அணைக்கிறோம்…

பெண் : பாட்டிக்குத் தெரிந்தது எந்நாளும் உயர்ந்ததே…
ஆராய்ந்து பார்க்க நம் விஞ்ஞானம் மறந்ததே…

பெண் : உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து… விருந்து…

BGM

பெண் : பாயாசம் இனிப்புக்கு…
பாகற்காய் கசப்புக்கு…
புளிசாதம் புளிப்புக்கு…
வாழைப்பூ துவா்ப்புக்கு…

பெண் : ஊறுகாய் நாவிலே காரமாய்…
சிட்டிகை உப்புதான் ஓரமாய்…
அறுசுவையும் நன்மையும் கொண்டாடி வாழ்ந்தவர்…
ஒரு சுவையும் இல்லாத உணவுக்கு தாவினோம்…

பெண் : இயந்திர குட்டிகள் இயன்றிடும் பொட்டலம்…
நம் சவப்பெட்டிகள் என்பதைக் கூறுவோம்…

பெண் : அக்கரை சேர்த்துதான் உணவிடும் தாய் மனம்…
நாமுமே நம் உடல் அப்படி பேணுவோம்… ஓஹோ…

பெண் : உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
விருந்து விருந்து… விருந்து விருந்து…


Notes : Unavey Marundhu Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Vivek. உணவே மருந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading