பொடி பையன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாராஜபாட்டை

Podi Paiyan Polave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…

—BGM—

ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே…
காதல் பின்னாலே வருகின்றதே…
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே…
தொல்லை தன்னாலே தருகின்றதே…

ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…

—BGM—

ஆண் : நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்…
எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்…
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்…
சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய்…

ஆண் : அறிவில்லை என் மூளையில்…
உண்மையே அது உண்மையே…
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே…

ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே…
காதல் பின்னாலே வருகின்றதே…
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே…
தொல்லை தன்னாலே தருகின்றதே…

—BGM—

ஆண் : உறங்காமல் பாடல் கேட்டேன்…
எழும்போதே தேநீர் கேட்டேன்…
இனிமேலே கேட்பேன் உன்னையே…

ஆண் : நடந்தே நீ போகும்போது…
நடைபாதை பூக்கள் யாவும்…
உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே…

ஆண் : மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன்…
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே…

ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே…
காதல் பின்னாலே வருகின்றதே…
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே…
தொல்லை தன்னாலே தருகின்றதே…

—BGM—


Notes : Podi Paiyan Polave Song Lyrics in Tamil. This Song from Rajapattai (2011). Song Lyrics penned by Yugabharathi. பொடி பையன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading