கண்ணால் மோதாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சித் ஸ்ரீராம்சந்தோஷ் நாராயணன்சர்வர் சுந்தரம் (2017)

Kannaal Modhadhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே…

ஆண் : கனவின் விதை நட்டிட்டாய்…
கவிதைகளை கற்பித்தாய்…
முகமும் அகமும் ஒன்றிங்கே…
நீ என் உள்ளே வீசும் சாரலே…

ஆண் : இசை ஒப்பித்தாய்…
இளமைகளை கொட்டிடாய்…
பசியும் ருசியும் ஒட்டிதான்…
காதலிலே நானும் பாதித்தேன்…

ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…

ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே… ஓ…

—BGM—

ஆண் : பொன் ஆடை போலே உடலிலே…
அடி என் தோளில் நீயே…

ஆண் : சிறகும் விரிய வந்தாய்…
உறவில் உதயம் தந்தாய்…
தனியே தனிமை கொன்றிங்கே…
தாகம் தந்தே யோகம் போதித்தாய்…

ஆண் : அசையும் அழகைக் கண்டேன்…
அறிவின் வளமை கண்டேன்…
துணிவின் வலிமை கொண்டிங்கே…
தோற்கின்றேனே மீண்டும் மீண்டும்தான்…

ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…

ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே…

—BGM—

ஆண் : ஆறடி நிலமே நான்தான்…
மானிட மழையே வா வா…
வானிடம் வரவா…
தீயால் ஆவி ஆகிறேன்…

ஆண் : நாள் தோறும் தாலாட்ட…
காதருகே பாராட்ட…
மோகத்தில் சீராட்ட…
மாறாமல் நீ வேண்டும்…

ஆண் : மாயத்தில் மாய்ந்தேனே…
மல மலவென தேய்ந்தேனே…
ஒரு முத்தம் கேட்டேனே…
அதை பெற்றால் வாழ்வேன் நானே…

ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…

ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே… ஓ…

ஆண் : கண்ணால் மோதாதே அழகியே…
நான் சொன்னால் தீராதே…
உன்னால் கூழாக உருகவே…
என் நெஞ்சே ஆறாதே… ஓஹோ…

ஆண் : இசை ஒப்பித்தாய்…
இளமைகளை கொட்டிடாய்…
பசியும் ருசியும் ஒட்டிதான்…
காதலிலே நானும் பாதித்தேன்…

ஆண் : ரதியே மதியே ஒளியே…
முன் தேடிவந்து சூடிக் கொள்ளும்…
கோடி மின்னலே…

ஆண் : சஞ்சனா சகியே உயிரே இதமே…
உன்னாலே நாளும்தான்…
மூளை மீது விரல்தானே…

ஆண் : அழகே அழகே… அமுதே அமுதே…
சகியே சகியே…


Notes : Kannaal Modhadhey Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Muthamil. கண்ணால் மோதாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading