நிற்காதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனந்து, விஜயநாராயணன் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்சர்வர் சுந்தரம் (2017)

Nirkadhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோடி விந்தணு மோதி வென்று நீ…
மண்ணில் வந்தவன் மறக்காதே…

—BGM—

ஆண் : கோடி விந்தணு மோதி வென்று நீ…
மண்ணில் வந்தவன் மறக்காதே…
பிறக்கும் முன்னமே வெற்றி கண்டவன்…
சின்ன புள்ளியில் சறுக்காதே…

ஆண் : முதலில் எதிர்த்த கல்லில் நதிகள் நின்றால்…
தேங்கி குறுகி ஆவியாகி தொலையும்…

ஆண் : முட்டை ஓட்டு விதியை மீற பயந்தால்…
பறவை என்று நீண்ட வானம் அடையும்…

ஆண் : தட்டித்தட்டி மாதம் உடைந்த போதும்…
முட்டி முட்டி நிலவு முழுமை அடையும்…

ஆண் : முயன்று பாரு நீயும்…
வியர்வைத் துளிகள் விதியை கரைத்து ஓடும்…

—BGM—

ஆண் : நிற்காதே நிக்காதே…
சரிய சரிய சரிய சரிய எழுந்திடு…
உடைய உடைய உடைய உடைய இணைந்திடு…

—BGM—

ஆண் : பிறக்கும்போது எல்லோர் பையிலும்…
இறைவன் சமமாய் நிறைகின்றான்…
ஒருவன் பையில் ஒன்றை எடுத்தால்…
நிகராய் வேறு குடுக்கின்றான்…

ஆண் : யாருக்கும் நீ குறைவே இல்லை…
எல்லோர் வானிலும் நிலவோ வெள்ளை…
உயர்வும் தாழ்வும் உந்தன் கையில் மட்டும்…
உழைக்கும் கைக்கு வெற்றிக்கதவு எட்டும்…

ஆண் : திறமைகள் ஏராளம்…
படைத்தவன் வீழ்ந்த கதைகளோ இங்குண்டு…
உழைத்தவன் எந்நாளும்…
கதைகளில் கூட விழுந்ததே கிடையாது…

ஆண் : முடிவெடு போராட…
உனைத்தொட பயந்து தடைகள் பின்னோடும்…

ஆண் : நிமிர்ந்திடு நீயாக…
எவன் வர வேண்டும் உனக்கு நீ போதும்…
நீ போதும் நீ போதும் நீ போதும் நீ போதும்…

ஆண் : நிற்காதே நிக்காதே…
சரிய சரிய சரிய சரிய எழுந்திடு…
உடைய உடைய உடைய உடைய இணைந்திடு…

—BGM—

ஆண் : பழகப்பழக எதுவும் கைவரும்…
விலகிப்போனால் எல்லாம் தொலைந்திடும்…

ஆண் : முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்…
முயலாமைதான் வெல்லாது…
யாரோ சொன்ன உண்மை இதுதான்…
உள்ளே வை நீ மறவாது…

ஆண் : தடையிடும் கல்லை நீ…
உடைத்தெறி முன்னேறிடு…
உடைத்ததும் சாயாத…
தாண்டி நீ வென்றோடிடு…

ஆண் : தாண்டவே முடியாத…
கரையக்கூடும் தொடர்ந்து முட்டி போனால்…
கரைப்பதும் ஆகாதா…
சுற்றி நீண்ட பாதை செல்லு ஆனால் நிற்காதே…

ஆண் : நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே…
நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே…

ஆண் : சரிய சரிய சரிய சரிய எழுந்திடு…
உடைய உடைய உடைய உடைய இணைந்திடு…

ஆண் : நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே…
நிற்காதே நிற்காதே நிற்காதே நிற்காதே…

ஆண் : சரியா சரியா சரியா சரியா எழுந்திடு…
உடைய உடைய உடைய உடைய இணைந்திடு…

ஆண் : நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே…
நிற்காதே ஹேஹே நிற்காதே ஹேஹே…
நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே…
நிற்காதே ஹே ஹே நிற்காதே ஹே ஹே…

ஆண் : நிற்காதே…

—BGM—


Notes : Nirkadhey Song Lyrics in Tamil. This Song from Server Sundaram (2017). Song Lyrics penned by Vivek. நிற்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading