உன் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமல்லிகார்ஜுன் & ஹரிணிமணி சர்மாஏழுமலை

Un Punnagai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் நிழலை சூரியன் கேட்டால்…
உன் நிறத்தை பௌர்ணமி கேட்டால்…
உன் வாசம் மல்லிகை கேட்டால்…
உன் சுவாசம் தென்றல் கேட்டால்…

ஆண் : தரத்தான் வேண்டும் என்றே அழுதால்…
என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேன்…
நான் என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

—BGM—

ஆண் : உன் கன்னம் ரெண்டில் விழுகிற குழியை…
முந்திரி கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது கண்ணா நீ என்றால்…
ஆண் : அதில் முத்தம் தந்து விடு…

ஆண் : உன் உள்ளம் கையை தாமரை மொட்டு…
தடமாய் கேட்டால் என் செய்வேன்…

பெண் : அது கேட்பது அன்பே நீ என்றால்…
ஆண் : அதை எனக்கே தந்து விடு…

ஆண் : உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
உன் பக்தி மொத்தம் தாவென்று…
கடவுள் கேட்டால் என் செய்வேன்…
எனக்கே எனக்கே முழுசாய் தந்து விடு…
பெண் : ஆஹா… ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

—BGM—

ஆண் : உன் அழகை புகழும் வாய்ப்பை…
தமிழின் கவிகள் கேட்டால் என் செய்வேன்…
பெண் : அந்த வாய்ப்பை அன்பே நீ கேட்டால்…
ஆண் : அதை உடனே தந்து விடு…

ஆண் : உன் நெற்றி பொட்டாய் வாழும் சுகத்தை…
விண்மீன் கேட்டால் என் செய்வேன்…
பெண் : என் உயிரின் உயிரே நீ கேட்டால்…
ஆண் : தயங்காமல் தந்து விடு…

ஆண் : உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உன் ஆயுள் முழுதும் கூட வர…
காலம் கேட்டால் என் செய்வேன்…
உனக்கென பிறந்த எனக்கே தந்து விடு…
பெண் : ஆஹா ஆஆஆஆ…

ஆண் : உன் புன்னகை கண்டு மயங்கி…
பூக்கள் எல்லாம் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

ஆண் : உன் கண் இமை கண்டு விரும்பி…
தோகை மயிலும் கடனாய் கேட்டால்…
என் செய்வேன் என் செய்வேன்…
என் செய்வேன்…

பெண் : என் கண்ணின் மணியும் நீதான்…
என் கையில் ரேகை நீதான்…
என் இதழின் ஈரம் நீதான்…
என் இரவின் விடியல் நீதான்…

பெண் : உணர்வை உடலை உயிரை…
உனக்கே தந்தேனே தந்தேனே…
தந்தேனே தந்தேனே தந்தேனே தந்தேனே…


Notes : Un Punnagai Song Lyrics in Tamil. This Song from Ezhumalai (2002). Song Lyrics penned by Thamarai. உன் புன்னகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading