உலகில் எந்த காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன்சுந்தர் சி பாபுநாடோடிகள்

Ulagil Yentha Kathal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
காதல் தோற்றதாய் கதைகள் ஏது…
தோற்றால் தோற்றது காதல் ஆகாது…
எல்லாமே சந்தர்ப்பம்…
கற்பிக்கும் தப்பர்த்தம்…

ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…

—BGM—

ஆண் : நினைவுகளாலே நிச்சியதார்த்தம் நடந்தது அவனோடு…
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு…

ஆண் : ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன்…
இரு கொள்ளி எரும்பானாள்…
பாசத்துக்காக காதலை தொலைத்து…
ஆலையில் கரும்பானாள்…

ஆண் : யார் காரணம் யார் காரணம்…
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல…
கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன்…
சுற்றம் செய்த குற்றம்தானே…

ஆண் : உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ் நிலை…
உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ்நிலை…

—BGM—

ஆண் : மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை…
முதல் முதல் எரிந்தாளே…
அலைஅலையாக ஆசைகள் எழும்ப…
அவள் வசம் விழுந்தானே…

ஆண் : நதி வழிப்போனால் கரை வரக்கூடும்…
விதி வழி போனானே…
விதை ஒன்று போட வேர் ஒன்று முளைத்த…
கதை என்று ஆனானே…

ஆண் : என் சொல்வது என் சொல்வது…
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்…
கற்பை போலே நட்பை பார்த்தான்…
காதல் தோற்கும் என்றா பார்த்தான்…

ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…
காதல் தோற்றதாய் கதைகள் ஏது…
தோற்றால் தோற்றது காதல் ஆகாது…
எல்லாமே சந்தர்ப்பம்…
கற்பிக்கும் தப்பர்த்தம்…

ஆண் : உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது…
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது…


Notes : Ulagil Yentha Kathal Song Lyrics in Tamil. This Song from Naadodigal (2009). Song Lyrics penned by Vaali. உலகில் எந்த காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading