உலகை வெல்ல போகிறாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஹரிணிதமன் எஸ்அன்னபூரணி

Ulagai Vella Pogiraal Song Lyrics in Tamil


BGM

பெண் : உலகை வெல்ல போகிறாள்…
அவள் ஒருத்தி உறுதி என ஆகிறாள்…
பல படிகள் தோன்றினால்…
பயம் நிறுத்தி ஒரு படியில் ஏறினாள்…

பெண் : தடைகலோ தோன்றும் ஏராளம்…
விடைகளை தான் பார்த்தாள்…
அடுப்பிலே போகும் பெண் வாழ்வை…
உயர்திட வழி பார்த்தாள்…

பெண் : ஆலம் ஆனால் ஆழம் ஆனால்…
அமுதமே செய்யும் தாயானாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா…
கனவுகள் துணையென பூத்தாளா…
சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா…
சிறகென திறமைகள் சேர்த்தாளா…

BGM

பெண் : தந்தையின் தோள்களை ஊஞ்சலாய் உணர்ந்தாளா…
ஆசையாய அவர் அழைக்க தோகையாய் அசைந்தாளா…

பெண் : அசையும் அவள் ஆசையைத் தடுக்க…
அசைவ சுவர் தேவையா…
ஒரு புயலின் பாதையை மறிக்க…
சருகுகளின் வேலியா…

பெண் : வண்ணம் ஆனாள் அன்னம் ஆனாள்…
புது வழியின் பூரணமாய்…

பெண் : கலைமகள் கருவினில் வளர்ந்தாளா…
கனவுகள் துணையென பூத்தாளா…
சிரிப்புடன் நெருப்பில் நடந்தாளா…
சிறகென திறமைகள் சேர்த்தாளா…

BGM


Notes : Ulagai Vella Pogiraal Song Lyrics in Tamil. This Song from Annapoorani (2023). Song Lyrics penned by Vivek. உலகை வெல்ல போகிறாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading