திருநெல்வேலி சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஆதித்தன்சீவலப்பேரி பாண்டி

Tirunelveli Seemayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…
திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம் தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குலம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

—BGM—

ஆண் : பாளையங் கோட்டையில பாண்டி பய பேரு சொன்ன…
குத்தால அருவிக்கே குப்புனு வேர்த்துரும்மா…
நாங்கு நீரிலே பாண்டி பய கம்பெடுத்தா…
சங்கரன் கோவில்புர சர்கார் வண்டி ஓடாதா…

குழு : ஊர் ஊர் ஊர் இவன் பக்கம் இருக்க…
தெ தெதெ தெருப்பேர் இருக்கு…
நெஞ்சினுள்ளே இருக்கு நீதிமன்றம் எதுக்கு…
நல்ல காலம் இருக்கு நம்மூருக்கு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா… டோய்…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

—BGM—

ஆண் : தமிழன் ஆஸ்தி எல்லாம் தன்மானம் தாண்டா…
தாமிர பரணி தண்ணி குடிச்சவன் நாண்டா…
பொண்ணும் போரும் வந்தா போர்க்களம்தான் போவேன்டா…
ஒருத்தன் நம்பி வந்தா உயிர் குடுக்கும் தேவன்டா…

குழு : சொய் சொய் சொய் சுத்த ரத்தம் வாழ்க…
சொய் சொய் சொய் சூரி கத்தி வாழ்க…
சத்தியங்கள் வாழ்க ஜாதி சனம் வாழ்க…
தென்பாண்டி சீமையே நீ வாழ்கவே…

ஆண் : அட திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

ஆண் : ஹே… புலித்தேவன் பொறந்தது இந்த மண்ணு…
பல போர் கண்டு செயிச்சது இந்த மண்ணு…

குழு : நல்ல காதல் சொன்னது இந்த மண்ணு…
அந்த கற்புக்கு நின்னது இந்த மண்ணு…
இங்க மானம் வீரம்தான் ரெண்டு கண்ணு…

ஆண் : திருநெல்வேலி சீமையிலே சீவலப்பேரி பாண்டியடா…

குழு : குளம் காக்க மண்ணின் குணம் காக்க…
நம்ம பாண்டி பாண்டி வந்தானையா…

—BGM—


Notes : Tirunelveli Seemayile Song Lyrics in Tamil. This Song from Seevalaperi Pandi (1994). Song Lyrics penned by Vairamuthu. திருநெல்வேலி சீமையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading