துளி துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

Thuli Thuli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
பார்த்தால் பார்க்க தோன்றும்…
பேரை கேட்க தோன்றும்…
பூப்போல் சிரிக்கும்போது…
காற்றாய் பறந்திட தோன்றும்…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…

—BGM—

ஆண் : தேவதை அவள் ஒரு தேவதை…
அழகிய பூ முகம் காணவே ஆயுள்தான் போதுமோ…
காற்றிலே அவளது வாசனை…
அவளிடம் யோசனை கேட்டுதான்…
பூக்களும் பூக்குமோ…

ஆண் : நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது…
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்…
பார்வை ஆளை தூக்கும்…

ஆண் : கன்னம் பார்த்தால்…
முத்தங்களால் தீண்ட தோன்றும்…
பாதம் ரெண்டு பார்க்கும் போது…
கொலுசாய் மாற தோன்றும்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

—BGM—

ஆண் : சாலையில் அழகிய மாலையில்…
அவளுடன் போகவே ஏங்குவேன்…
தோள்களில் சாயுவேன்…
பூமியில் விழுகிற வேளையில்…
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன்…
நெஞ்சிலே தாங்குவேன்

ஆண் : காணும்போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்…
காயம் இன்றி வெட்டி போட்டாள்…
உயிரை ஏதோ செய்தாள்…

ஆண் : மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்…
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்…
கனவில் கூச்சல் போட்டாள்…
அழகாய் மனதை பறித்துவிட்டாளே…

ஆண் : செல் செல் அவளிடம் செல்…
என்றே கால்கள் சொல்லுதடா…
சொல் சொல் அவளிடம் சொல்…
என்றே நெஞ்சம் கொல்லுதடா…

—BGM—

ஆண் : துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…
துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஏ… ஏ…
சுட சுட சுட மறைந்தே போனாளே… ஏ… ஏ…


Notes : Thuli Thuli Song Lyrics in Tamil. This Song from Paiya (2010). Song Lyrics penned by Na. Muthukumar. துளி துளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading