என் காதல் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & தன்வியுவன் ஷங்கர் ராஜாபையா

En Kadhal Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…

ஆண் : உன் அழகாலே… உன் அழகாலே…
என் வெயில் காலம் அது மழை காலம்…
உன் கனவாலே… உன் கனவாலே…
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

—BGM—

ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்…
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
வயதோடும் மனதோடும் சொல்லாமலே…
சில எண்ணங்கள் வலை வீசுதே…

ஆண் : காதல் வந்தாலே கண்ணோடுதான்…
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ…
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி…
இந்த விளையாட்டை ரசித்தேனடி…

ஆண் : உன் விழியாலே… உன் விழியாலே…
என் வழி மாறும் கண் தடுமாறும்…
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்…
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி…
உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே…
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி…
இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

ஆண் : யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்…
என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…
சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது…
உன்னை கண்டாலே குதிகின்றதே…

ஆண் : என் அதிகாலை… என் அதிகாலை…
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்…
என் அந்தி மாலை என் அந்தி மாலை…
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்…

ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை…
உன் காதல் சொல்ல தேவை இல்லை…
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை…
உண்மை மறைத்தாலும் மறையாதடி…

ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை…
உன் தோளில் சாய ஆசை இல்லை…
நீ போன பின்பு சோகம் இல்லை…
என்று பொய் சொல்ல தெரியாதடி…


Notes : En Kadhal Solla Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthu Kumar. என் காதல் சொல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading