எங்கே எனது கவிதை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Enge Enathu Kavithai Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

பெண் : எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
விழியில் கரைந்துவிட்டதோ…
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…

பெண் : கவிதை தேடித்தாருங்கள்…
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…
எங்கே எனது கவிதை…
கனவிலே எழுதி மடித்த கவிதை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்…
தொலைந்த முகத்தை மனம் தேடுதே…
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்…
மையல் கொண்டு மலா் வாடுதே…

பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்…
துருவித் துருவி உனைத் தேடுதே…
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை…
உருகி உருகி மனம் தேடுதே…

பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்…
அமைதியில் நிறைந்திருப்பேன்…
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு…
நூறு முறை பிறந்திருப்பேன்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…
நிழல் கண்டவுடன் நீயென்று…
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்…

குழு (ஆண்கள்) : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்…
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட…
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே…
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது…
நித்தம் வேண்டும் என்று ஏங்குதே…

—BGM—

பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று…
ஒட்டும் என்று மனம் ஏங்குதே…
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு…
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே…

—BGM—


Notes : Enge Enathu Kavithai Song Lyrics in Tamil. This Song from Kandukondain Kandukondain (2000). Song Lyrics penned by Vairamuthu. எங்கே எனது கவிதை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading