தோழியா என் காதலியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பி.வி. பிரசாத்விஜய் ஆண்டனி, ஹரிஷ் ராகவேந்திரா & ஸ்ரீ சரண்விஜய் ஆண்டனிகாதலில் விழுந்தேன்

Thozhiya En Kadhaliya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…

ஆண் : மடி மீது தூங்கச் சொல்கிறாய்…
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்…
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்…
ஓஹோ ஹோ பெண்ணே…

ஆண் : ஏனடி என்னைக் கொள்கிறாய்…
உயிா்வரை சென்று தின்கிறாய்…
மெழுகுபோல் நான் உருகினேன்…
என் கவிதையே என்னை காதல் செய்வாய்…

ஆண் : கனவிலும் நீ வருகிறாய்…
என் இமைகளைத் தொட்டுப் பிாிக்கிறாய்…
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்…
உன் பதிலென்ன அதை நீயே சொல் நீ…

ஆண் : தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…

—BGM—

ஆண் : ஒரு துளி நீா் வேண்டி நின்றேன்…
அடை மழை தந்து…
என்னை மிதக்கவிட்டாய்…

ஆண் : சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்…
சுகங்களை தந்து…
என்னை நிமிர வைத்தாய்…

ஆண் : விழிகள் ஓரம் நீா்த்துளியை…
மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்…
பாலைவனத்தில் பூக்கள் தந்து…
சொா்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்…

ஆண் : கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்…
காலை நேரம் இரவு கண்டேன்…
வெள்ளை நிறத்தின் தேவதையே…
வண்ணங்களை தந்துவிட்டு…
என் அருகில் வந்து நில்லு…

ஆண் : தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…

—BGM—

ஆண் : இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்…
மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய்…
தனி அறையில் அடைந்துவிட்டேன்…
சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்…

ஆண் : அலைகள் அடித்து தொலைந்துவிடும்…
தீவைப்போல மாட்டிக் கொண்டேன்…
இறுதிச்சடங்கில் மிதிகள் படும்…
பூவைப்போல் கசங்கி விட்டேன்…

ஆண் : தெய்வம் பூமிக்கு வருவதில்லை…
தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்…
தாயும் இங்கு எனக்கு இல்லை…
எனக்கொரு தாயை அவன்…
உன்னுருவில் தந்துவிட்டான்…

ஆண் : தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…

ஆண் : மடி மீது தூங்கச் சொல்கிறாய்…
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்…
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்…
ஓஹோ ஹோ பெண்ணே…

ஆண் : ஏனடி என்னைக் கொள்கிறாய்…
உயிா்வரை சென்று தின்கிறாய்…
மெழுகுபோல் நான் உருகினேன்…
என் கவிதையே என்னை காதல் செய்வாய்…

ஆண் : கனவிலும் நீ வருகிறாய்…
என் இமைகளைத் தொட்டுப் பிாிக்கிறாய்…
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்…
உன் பதிலென்ன அதை நீயே சொல்… நீ…

ஆண் : தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…

—BGM—


Notes : Thozhiya En Kadhaliya Song Lyrics in Tamil. This Song from Kadhalil Vizhunthen (2008). Song Lyrics penned by P. V. Prasath. தோழியா என் காதலியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading