தோழி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிரதீப் குமார்கோவிந்த் வசந்தாஹே சினாமிகா

Thozhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரோடும் காணாத தூய்மையை…
உன்னில் நான் காண்கிறேன்…
முன் என்றும் இல்லாத ஆசைகள்…
உன்னாலே நான் கொள்கிறேன்…

ஆண் : வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்…
நான் ஓய…
விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய்…
என் செய்வேன்…

ஆண் : சொல்லடி தோழி தோழி…
என்னருந்தோழி சொல்லடி…

BGM

ஆண் : ஹேய்… கண்ணாடியே என் பிம்பம்…
என்னை போல் இல்லையே உனில்…
ஹேய்… என் வானொலியே என் பேச்சு…
தூறல் போல் கேட்குதே உனில்…

ஆண் : ஹேய்… என் நிழற்துணையே…
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா…
ஹேய் உயிர்க்கதவே…
திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா…

ஆண் : தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி…

ஆண் : நீதானா என்னுள் வீழ்வது…
தீரா தூறல்களாய்…
நீதானா என்னுள்ளே மூழ்வது…
தூங்காத தீப்பூக்களாய்…

ஆண் : கவிதைகள் சுவைக்கும் துணையாய்…
நீயானாய் நீயானாய்…
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்…
என் செய்வேன்…

ஆண் : சொல்லடி சொல்லடி…
சொல்லடி சொல்லடி…
தோழி தோழி சொல்லடி…
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி…


Notes : Thozhi Song Lyrics in Tamil. This Song from Hey Sinamika (2022). Song Lyrics penned by Madhan Karky. தோழி பாடல் வரிகள்.


Scroll to Top