ஒரு துளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைசித்தார்த் மகாதேவன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஈட்டி

Oru Thuli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…

ஆண் : கடிகாரம் முள்ளை போலே…
நிற்காமல் நீ ஓடு…
கால் தீண்டும் தூரம்தானே வெற்றி கொடு…

ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திட டா…

—BGM—

ஆண் : குறி வச்சு அடி வெற்றி வரும்படி…
உன் முத்திரையை பாதி நீ ஓயாதே…
மண்ணை கீறி விதை மேலே வரும் வரை…
பூமிக்குள்ளே அது அஹீனம் போராடும்…

ஆண் : உழைத்திடும் வரை உன் வலித்திடும் உடல்…
வாங்கும் தங்க மெடல் நீ கலங்காதே…

ஆண் : உனக்கொரு எல்லை…
உலகத்தில் எல்லை…
கடவுளின் பிள்ளை இங்கு நீதானே…

ஆண் : பாதம் பட்ட இடம் யாவும்…
பாதை என்றே மாற்றிட ஓடு…

—BGM—

ஆண் : தடுக்கி நீ விழு…
திரும்ப நீ எழு…
அதில் ஒன்றும் பிழை இங்கு கிடையாது…

ஆண் : ஒரு சிறு பிறை…
தெரிகின்ற கரை…
நிலவுக்கு குறை அது கிடையாது…

ஆண் : பசிக்கொண்ட புலி…
மானை வைக்கும் குறி…
வேட்டையாடும் போது இரை தப்பாது…

ஆண் : ஆகாயத்தை திற…
நீ அதை தாண்டி பற…
வானவில்லும் மாலை அது உனக்காக…

ஆண் : பாதம் பட்ட இடம் யாவும்…
பாதை என்றே மாற்றிட ஓடு…

ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…

ஆண் : கடிகாரம் முள்ளை போலே…
நிற்காமல் நீ ஓடு…
கால் தீண்டும் தூரம்தானே வெற்றி கொடு…

ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…

—BGM—


Notes : Oru Thuli Song Lyrics in Tamil. This Song from Eetti (2015). Song Lyrics penned by Annamalai. ஒரு துளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading