தொட்டு தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிரமேஷ் விநாயகம் & ஸ்ரீவர்த்தினிரமேஷ் விநாயகம்ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Thottu Thottu Song Lyrics in Tamil


ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : துள்ளி துள்ளி உந்தன் மடியிலே…
பனித்துளி மனசு விழுகிறதே…

பெண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே…
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே…
ஒரு கிராம் மின்னல் இடையினிலே…
நான் உனக்கென பிறந்தேன் பூமியிலே…

ஆண் : ஹே… தொட்டு செல்லும் தொட்டு செல்லும்…
அஹ்… தொட்டு தொட்டு தொட்டு செல்… ஹே…
தொட்டு தொட்டு தொட்டு செல்…
தொட்டு செல்லும் தொட்டு செல்லும்…
அஹ்… தொட்டு தொட்டு தொட்டு செல்…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

குழு : உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…
உள்ளே உள்ளே உனக்கு சாம்பையா… ய ய…

ஆண் : உலகெங்கிலும் சுகம் உள்ளது…
அதை வாங்கிட பணம் உள்ளது…
மனசு மயங்குது எதுக்காக…
குழு : உள்ளே… உள்ளே…

பெண் : நமக்கானவன் யார் என்பதை…
நம் கண்களால் நாம் தேடணும்…
மனசு மயங்குது அதுக்காக…
குழு : உள்ளே… உள்ளே…

ஆண் : பார்வை சொல்லும் காதல்…
பாதை மாறி போனால்…
அழகு பெண்ணின் வாழ்க்கை…
அப்போது என்னாகுமோ…

பெண் : காதல் கொள்ளும் ஆண்கள்…
தவறு செய்வது இல்லை…
கள்ள நெஞ்சத்தில்…
பெண் காதல் குடிக் கொள்ளுமோ…

ஆண் : காதல் சுகமான தேடல்…
உயிரில் விழுகின்ற சாரல்…
துளிகள் கடலென பெருகிட பெருகிட…

பெண் : நதிகள் வீசுதே…
காதல் காதலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

BGM

ஆண் : சில நேரங்கள் விழ வைக்கிறாய்…
சில நேரங்கள் எழ வைக்கிறாய்…
எதுக்கு எதுக்கிந்த விளையாட்டு…
குழு : உள்ளே… உள்ளே…

பெண் : விழ வைப்பதும் எழ வைப்பதும்…
அழ வைப்பதும் சுகம் சேர்ப்பதும்…
அழகு பதுமையின் கையோடு…
குழு : உள்ளே… உள்ளே…

ஆண் : பாதி இதயம் அங்கே…
மீதி இதயம் இங்கே…
எனது நெஞ்சத்தை ஏனடி துண்டாக்கினாய்…

பெண் : அந்த நிலைதான் இங்கும்…
காதல் இதுதான் எங்கும்…
உடைந்த உள்ளத்தை முத்தத்தில் ஒன்றாக்கலாம்…

ஆண் : காதல் சுகமான தேடல்…
உயிரில் விழுகின்ற சாரல்…
துளிகள் கடலென பெருகிட பெருகிட…

பெண் : அலைகள் வீசுதே…
காதல் காதலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : ஹேய்… தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே…
சுட சுட சுட ஆசை வருகிறதே…

ஆண் : நட்சத்திர நடக்கும் கண்களிலே…
மேகங்களின் தொடக்கம் கூந்தலிலே…
ஒரு கிராம் மின்னல் இடையினிலே…
அடி எப்படி நீ பொறந்தே பூமியிலே…

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…

BGM

ஆண் : மஹம்மது மாரே மேரே ஹோஸு மாரே…
ஹோஸு மாரே ஹையோ ஹோஸு மாரே…


Notes : Thottu Thottu Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. தொட்டு தொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top