ஒரு காதல் வந்துச்சோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷங்கர் மகாதேவன்ராகவ் & ராஜாஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே

Oru Kadhal Vandhucho Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

ஆண் : என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவும்…
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவும்…
அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே…
அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே…

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென…
நெஞ்சத்தில் படபடபடவென…
ஆசை வந்து கொத்திச்சோ…

ஆண் : எண்ணத்தில் சடுகுடுகுடுவென…
நெஞ்சத்தில் படபடபடவென…
ஆசை வந்து கொத்திச்சோ…

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

பெண் : தித்தோம் தக தாதி தத்தோம்…
தக தாதி தத்தோம்…
தித்தோம் தக தாதி தத்தோம்…

BGM

பெண் : தித்தோம் தக தாதி தத்தோம்…
தக தாதி தத்தோம்…
தித்தோம் தக தாதி தத்தோம்…

BGM

ஆண் : கொஞ்சம் வெய்யிலும் உண்டு…
கொட்டுகின்ற பனி உண்டு…
ரெண்டும் நெருங்கி பழக…

ஆண் : இன்று பொழியும் மழை…
சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்…
மண்ணில் சிதறி விழுக…

ஆண் : மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட…
விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட…

பெண் : பழைய நிறங்களில் புதிய மலர்கள்…
புதிய இசையில் பழைய குயில்கள்…
வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்…

ஆண் : ஒஹ்… இது காதல் காலமடி என் சகியே…
இது காதல் காலமடி…
நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற ராகத்தில்…
ரகசிய ஆலாபனை…

BGM

ஆண் : இது காதல் காலமடி என் சகியே…
இது காதல் காலமடி…

ஆண் & பெண் : ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஓஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

BGM

ஆண் : மெல்ல நகர்ந்து வரும் சூரியனும் ஓடி சென்று…
கடலின் மடியில் விழுமே…
ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள்…
மெல்ல திரும்பி செல்லுமே…

ஆண் : பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட…
சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட…

பெண் : குளத்து நீரிலே தலையை தூக்கும்…
இளைய கமலம் சிரித்து தீர்க்கும்…
யாருக்காக மலர்ந்த கவிதையை அலை சேர்க்கும்…

பெண் : இது காதல் காலமடி…
ஆண் : காலமடி…
பெண் : இது காதல் காலமடி என் சகியே…
ஆண் : இது காதல் காலமடி…

ஆண் : முகமெல்லாம் கால் உண்டு…
நெஞ்சுக்குள்தான் வந்து…
கதக்களி செய்கின்றதே… ஏ…

BGM

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ் ஒஹ் ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ் ஒஹ் ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…

ஆண் : ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ்…
ஒரு காதல் வந்துச்சோ…
ஒரு காதல் வந்துச்சோ… ஒஹ்…

BGM


Notes : Oru Kadhal Vandhucho Song Lyrics in Tamil. This Song from Yai Nee Romba Azhaga Irukey (2002). Song Lyrics penned by Thamarai. ஒரு காதல் வந்துச்சோ பாடல் வரிகள்.


Scroll to Top