தொட்டாசிணுங்கி போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் கண்ணாகிருஷ்ணராஜ் & சுவர்ணலதாதேவாகண்ணால் பேசவா

Thottachinungi Pola Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

ஆண் : அந்த சீம காட்டுல…
சின்ன தேனு கூட்டுல…
அந்த தெக்கு சீமை கரத்துல…
தேனெடுத்து வச்சிருக்கேன்…
சின்ன பொண்ணே ஊட்டி விடவா…

பெண் : உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…
ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

—BGM—

ஆண் : மாமர தோப்பு வழி போகத்தம்மா…
மாங்காய பாத்துபுட்டா ஆசை வருமே…

—BGM—

பெண் : முருங்கை மர காட்டு வழி போகாதீங்க…
முருங்கை மர காதடிச்ச ஒதுக்காதுங்க…

—BGM—

ஆண் : பாரிஜாத பூவெடுத்து பாதங்களில் வச்சிடவா…
பெண் : கொத்து மஞ்ச கிழங்கை உரசி தந்தா போதுமே…

ஆண் : வெள்ளி மேகம் கொண்டு வரவா…
உனக்கே தாவணியா போட்டுவிடவா…

பெண் : வெள்ளி நிலா கொண்டு வரணும்…
எனக்கே நெத்தியில பொட்டு வைக்கணும்…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

—BGM—

பெண் : மல்லியப்பூ தோட்ட வழி போகாதீங்க…
மகராசி நினைப்பதான் தூண்டுமுங்க…

—BGM—

ஆண் : அல்லவா கடை தெருவோரம் போகத்தம்மா…
அத்தானோட நெனப்பத்தான் தூண்டும்மம்மா…

—BGM—

பெண் : உன் நினைப்பு வந்துவிட்டால் வேப்பங்காயும் இனிக்கும்…
ஆண் : உன் நினைப்பு பொய் விட்டால் செங்கரும்பு கசக்கும்…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

பெண் : அந்த சீம காட்டுல…
சின்ன தேனு கூட்டுல…
அந்த தெக்கு சீமை கரத்துல…
தேனெடுத்து வச்சிருக்கேன்…
சின்ன பொண்ண கேட்கவில்லையே…

பெண் : உங்க ஆசை வார்த்தை சொல்ல கேட்டு…
ஏமாந்த தேதியெல்லாம் மலையேறி தாண்டிப்போச்சே…

ஆண் : தொட்டா சிணுங்கி போல…
தொட்டா சிணுங்குறாலே சிட்டான சிட்டு குருவி…
என்ன விட்டா போதுமுன்னு…
சிட்டா பறக்குறாளே குத்தால கொட்டும் அருவி…

Notes : Thottachinungi Pola Song Lyrics in Tamil. This Song from Kannaal Pesavaa (2000). Song Lyrics penned by Raj Khanna. தொட்டாசிணுங்கி போல பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading