பாடு நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉதய கீதம்

Paadu Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…

BGM

பெண் : நீ போகும் பாதை என் பூங்காவனம்…
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்…
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ…
என் வீடு வாராமல் ஏன் போகுமோ…

பெண் : கைதான போதும் கை சேர வேண்டும்…
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்…
என் ஜென்மமே ஈடேறவே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
உன் பாடலை நான் கேட்கிறேன்…
பாமாலையை நான் கோர்க்கிறேன்…
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…

BGM

ஆண் : ஊரெங்கும் போகும் என் ராகங்களே…
உன் வீடு தேடும் என் மேகங்களே…
பூ மீது தேன் தூவும் காதல் வரம்…
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்…

ஆண் : காவேரி வெள்ளம் கை சேர துள்ளும்…
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்…
காதல் நிலா தூதாகுமே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்…
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்…

பெண் : பாடும் நிலாவே…
ஆண் : தேன் கவிதை…
பெண் : பூ மலரே…


Notes : Paadu Nilave Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Mu. Metha. பாடு நிலாவே பாடல் வரிகள்.


Scroll to Top