சங்கீத மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Sangeetha Megam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
என்றும் விழாவே என் வாழ்விலே…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…

—BGM—

ஆண் : போகும் பாதை தூரமே…
வாழும் காலம் கொஞ்சமே…
ஜீவ சுகம் பெற ராக நதியினில்…
நீ நீந்தவா…

ஆண் : போகும் பாதை தூரமே…
வாழும் காலம் கொஞ்சமே…
ஜீவ சுகம் பெற ராக நதியினில்…
நீ நீந்தவா…

ஆண் : இந்த தேகம் மறைந்தாலும்…
இசையாய் மலர்வேன்…
இந்த தேகம் மறைந்தாலும்…
இசையாய் மலர்வேன்…
கேளாய் பூமனமே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…

—BGM—

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே…
பாடல் என்னும் தேரிலே…
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே…

ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே…
பாடல் என்னும் தேரிலே…
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே…

ஆண் : எந்தன் மூச்சும் இந்த பாட்டும்…
அணையா விளக்கே…
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்…
அணையா விளக்கே…
கேளாய் பூமனமே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே…
என்றும் விழாவே என் வாழ்விலே… ஓஓ…

ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்…


Notes : Sangeetha Megam Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Muthulingam. சங்கீத மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading