தோரி போரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & அமலா செபோலுஎம். எம். கீரவாணிசந்திரமுகி 2

Thori Bori Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : கள்ளமில்லா உள்ளமிருந்தால்…
கையில்வரும் வெற்றிகள் தானா…
அள்ளி அள்ளி அன்பையும் தந்திட…
இன்பன் உன்னை என்றென்றும் எண்ணிடுமே தோழனா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

BGM

ஆண் : யாதும் இங்கே ஊரே என்றால்…
எல்லைக் கோடே நீளாதையா…
குழு : எல்லைக் கோடே நீளாதையா…

ஆண் : மூத்தோர் எல்லாம் தெய்வம் என்றால்…
நித்தம் பூஜை செய்வோமையா…

குழு : நித்தம் பூஜை செய்வோமையா…

ஆண் : ஆனந்தம் நமக்குள்ளே இருப்பது கண்கூடு…
நாளெல்லாம் விளக்கேற்றி உறவினில் கொண்டாடு…
தேங்காமல் நதி போலே ஓடு…

ஆண் : அன்னை அவள் அன்பு முகத்தில்…
ஆண்டவனை கண்டிடலாமே…
மெல்ல அவள் சிந்திடும் புன்னகை…
கை அசைக்க துன்பங்கள் தூரத்திலே ஓடுமே…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியனா சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

BGM

பெண் : யாரோ பெத்த பிள்ளை என்று…
உன்னை சொல்ல மாட்டோமய்யா…

குழு : உன்னை சொல்ல மாட்டோமய்யா…

ஆண் : எங்க வீட்டு பிள்ளை என்றே…
ஊரே சொல்ல கேட்டோமாயா…

குழு : ஊரே சொல்ல கேட்டோமாயா…

ஆண் : கை மாறே கருதாமல்…
பெண் : கொடுப்பதில் வேள் பாரி…

ஆண் : தனதென்று எண்ணாமல்…
பெண் : தருவாயே நீ வாரி…
உன்னைப் பார்த்தே பொழியதோ மாரி…

பெண் : உன்னுடைய நல்ல மனதை…
சொல்ல ஒரு சொல் கிடையாதே…
உன் அழகிய மின்னலும் தென்றலும்…
தித்தித்திட நித்தமும் சொல்லிடவே ஏங்குதே…

ஆண் & பெண் : தோரி போரி தோம் தரனா…
சூரியன சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…

ஆண் : தோரி போரி தோம் தரனா…
சூரியன சந்திரனா…
புன்னகையைப் பூத்து சிரிப்பேன் வானா…


Notes : Thori Bori Song Lyrics in Tamil. This Song from Chandramukhi 2 (2023). Song Lyrics penned by Yugabharathi. தோரி போரி பாடல் வரிகள்.


Scroll to Top