தூங்காத விழிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஅக்னி நட்சத்திரம்

Thoongatha Vizhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

ஆண் : மாமர இலை மேலே… ஆஆ ஆஆ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே…
பூமகள் மடி மீது நான் தூங்கவோ…

பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்…
ராஜனை கையேந்தி தாலாட்டவோ…

ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம்…
சேரும் நேரம் தீரும் பாரம்…

BGM

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…

BGM

பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக…
நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ…

ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்…
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ…

பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட…
மாருதம் உறவாடும் கலை என்னவோ…

ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற…
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ…

பெண் : மேலும் மேலும் மோகம் கூடும்…
ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும்…

BGM

பெண் : தூங்காத விழிகள் ரெண்டு…
ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…
பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும்…
பன்னீரைத் தெளித்தாலும்…
ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது…

பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு…
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று…


Notes : Thoongatha Vizhigal Song Lyrics in Tamil. This Song from Agni Natchathiram (1988). Song Lyrics penned by Vaali. தூங்காத விழிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading