தோடி ராகம் பாடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ராசந்திரபோஸ்மாநகர காவல்

Thodi Raagam Paadava Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

ஆண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் உன்னை சேர்த்து…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

BGM

ஆண் : இதுவரை உனை நானும்…
பெண் : ஆஆஆ…
ஆண் : இளயவன் எனை நீயும்…
பெண் : ஆஆஆ…
ஆண் : காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்…

பெண் : முதன் முதல் முகம் பார்த்து…
முழுவதும் உடல் வேர்த்து…
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்…

ஆண் : கல்யாணம் கச்சேரி…
கண்ணார எந்நாளில் காணலாம்…

பெண் : பொன்னூஞ்சல் பூப்பந்தல்…
வைபோகம் தை மாதம் மாலையிடு…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…

BGM

பெண் : இரவுகள் எனை வாட்டும்…
இடையினில் அனல் மூட்டும்…
நீ இன்றி நான் இங்கு பாய் போடும் மாது…

ஆண் : பிரிவுகள் இனி ஏது…
பிறவியில் கிடையாது…
நீ தானே நான் வந்து பூச்சூடும் மாது…

பெண் : அன்றாடம் பூங்காற்று…
உன் பேரை என் காதில் ஓதுது…

ஆண் : எப்போதுநான் வேண்டும்…
அப்போது பூங்காற்றை தூது விடு…

பெண் : தோடி ராகம் பாடவா…
ஆண் : மெல்ல பாடு…

பெண் : ஆதி தாளம் போடவா…
ஆண் : மெல்ல போடு…

பெண் : மேனி என்னும் வீணை…
மீட்டுகின்ற வேளை…
மடியினில் என்னை சேர்த்து…

ஆண் : தோடி ராகம் பாடவா…
பெண் : மெல்ல பாடு…

ஆண் : ஆதி தாளம் போடவா…
பெண் : மெல்ல போடு…


Notes : Thodi Raagam Paadava Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. தோடி ராகம் பாடவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading