காலை நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்மாநகர காவல்

Kaalai Neram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

—BGM—

ஆண் : பசும் சோலையில்…
வெயில் படும் வேளையில்…
நின்று குளிர் காயும்…
மடல் பூத்த மலர் கூட்டம்தான்…

ஆண் : கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும்…
மெல்ல நடை போடும்…
விடை கூறும் பனி மூட்டம்தான்…

ஆண் : தோட்டம் தோட்டமாய்…
கூட்டம் கூட்டமாய்…
வாழும் பறவை ஈர சிறகை…
உலர்த்தும் பொழுதுதான்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

—BGM—

ஆண் : இடையோடுதான் ஓட்டும் உடையோடுதான்…
மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள்…
பாப் சாங்தான் நல்ல பிரேக் டான்ஸ்தான்…
நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள்…

ஆண் : வாழை தண்டு போல்…
கீரை தண்டு போல்…
காலும் நெளிய கையும் நெளிய…
ஆடும் அழகிகள்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

ஆண் : விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

ஆண் : காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…

—BGM—


Notes : Kaalai Neram Song Lyrics in Tamil. This Song from Managara Kaval (1991). Song Lyrics penned by Vaali. காலை நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading