திருவாரூர் தேரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுஉதித் நாராயண் & அனுராதா ஸ்ரீராம்ஸ்ரீகாந்த் தேவாபழனி

Thiruvaroor Therae Song Lyrics in Tamil


பெண் : ஏய்… அங்க தொட்டு…
இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே…
அட கையதொட்டு…
காலதொட்டு மடக்கிப்புட்டானே…

BGM

ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்கவாடி…

பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…

ஆண் : தென்காசி போவோம் வரியா…
பெண் : சிவனே நீ எனக்கு முறையா…

ஆண் : அடி மதுரைக்கு போவோம் வரியா…
பெண் : இந்த மீனாட்சி உனக்கு துணையா…

BGM

ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்க வாடி…

பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…

BGM

ஆண் : திண்டுக்கல்லு பூட்டே என்ன விலை…
பெண் : நீ திருடிகிட்டு போனா குத்தமில்ல…

BGM

ஆண் : அடி மைசூரு பாக்கே என்ன விலை…
பெண் : நீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல…

BGM

பெண் : கோலாரு போயி வரலாமா…
கட்டி தங்கம் பெறலாமா…

ஆண் : கட்டி தங்கம் உனக்கெதுக்கு…
உன் மேனியே அதுல தானிருக்கு…

BGM

பெண் : நெய்வேலி போயி வரலாமா…
மின்சாரம் கொஞ்சம் பெறலாமா…

ஆண் : மின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு…
உன் கண்ணுல அந்த பவர் இருக்கு…

பெண் : ஊர் ஊரா போவோமா…
ஊரு சுத்தி பாப்போமா…
ஹேய்… ஊர் ஊரா போவோமா…
ஊரு சுத்தி பாப்போமா…

ஆண் : ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…

BGM

ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்க வாடி…

பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா… ஆஆஆ…

BGM

பெண் : அச்சச்சச்சோ…
ஆண் : அச்சச்சச்சோ…

குழு : அச்சச்சச்சோ…
அச்சச்சச்சோ… அச்சச்சச்சோ…

ஆண் : அரே காஞ்சிபுரம் பட்டு என்ன விலை…
பெண் : நீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை…

BGM

ஆண் : ஏய்… தூத்துகுடி முத்தே என்ன விலை…
பெண் : நீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே…

BGM

பெண் : அலங்கானல்லூர் போவோமா…
ஜல்லிக்கட்டு பாப்போமா…

ஆண் : ஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு…
கயித்து கட்டில் இங்கிருக்கு…

BGM

பெண் : கேரளா போயி வரலாமா…
ராஜ வைத்தியம் பெறலாமா…

ஆண் : ஹேய்… ராஜ வைத்தியம் உனக்கிருக்கு…
ராணி வைத்தியம் எனக்கிருக்கு…

பெண் : ஊர் ஊரா போவோமா…
ஊரு சுத்தி பாப்போமா…
ஹேய்… ஊர் ஊரா போவோமா…
ஊரு சுத்தி பாப்போமா…

ஆண் : ஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…

BGM

ஆண் : அடி திருவாரூர் தேரே பக்கம் வாடி…
திருவிழா உனக்கு வைக்க வாடி…

பெண் : அட மாமல்லபுரத்து மன்னா வாடா…
செதுக்கின சிலையா நிக்குறேண்டா…

ஆண் : தென்காசி போவோம் வரியா…
பெண் : சிவனே நீ எனக்கு முறையா…

ஆண் : அடி மதுரைக்கு போவோம் வரியா…
பெண் : இந்த மீனாட்சி உனக்கு துணையா…

BGM

பெண் : அச்சச்சச்சோ…


Notes : Thiruvaroor Therae Song Lyrics in Tamil. This Song from Pazhani (2008). Song Lyrics penned by Perarasu. திருவாரூர் தேரே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top