திரும்ப திரும்ப பார்த்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பி. உன்னிகிருஷ்ணன் & ஹரிணிபரணிபார்வை ஒன்றே போதுமே

Thirumba Thirumba Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

—BGM—

ஆண் : உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ…
காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ…
வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ…

பெண் : முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ…
எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ…
உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ…

ஆண் : காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே…
பெண் : இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே…

ஆண் : பிறப்பு போல இறப்பு போல…
ஒரு முறைதான் காதல் தோன்றுமே… ஆஆ…

பெண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

—BGM—

பெண் : கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய்…
கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய்…
இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது…

ஆண் : மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய்…
கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்…
இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது…

பெண் : இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது…
ஆண் : உன்னை பார்க்கும்போதுதான் நூறு மடங்கு கூடுது…

பெண் : வெட்கம் பாதி சொர்க்கம் பாதி…
மாறி மாறி வந்து போனது… ஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

பெண் : திரும்ப திரும்ப கடிதம் போட்டு…
திரும்ப திரும்ப இதயம் கேட்டு…
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா…

ஆண் : இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன்…
இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்…

பெண் : உயிரை கொண்டு உன்னை மூடினேன்… ஆஆஆ…

ஆண் : திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…

Notes : Thirumba Thirumba Song Lyrics in Tamil. This Song from Parvai Ondre Podhume (2001). Song Lyrics penned by Pa. Vijay. திரும்ப திரும்ப பார்த்து பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading