மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல்ப்ரீதம்Merry Christmas

Merry Christmas Title Track Song Lyrics in Tamil


ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…

—BGM—

ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…

ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…

ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…

—BGM—


Notes : Merry Christmas Title Track Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading