மீனா பொண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & சுஜாதா மோகன்சிற்பிநாட்டாமை

Meena Ponnu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மீனா பொண்ணு மீனா பொண்ணு…
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு…

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு…
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு…

ஆண் : கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு…
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு…

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு…
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு…

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு…
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு…

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு…
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு…

—BGM—

ஆண் : செவ்வானம் தொட்டு தொட்டு…
செந்தூரம் கொஞ்சம் இட்டு…
செவ்வல்லி பூவில் செய்த தேகமோ…

பெண் : மலையோடு தோள்கள் வாங்கி…
மதயானை தேகம் வாங்கி…
பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ…

ஆண் : குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்…
இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ…

பெண் : நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்…
உண்டான வீரம் உந்தன் வீரமோ…

ஆண் : உன்னை முழுசாக முத்தம் இட வேணும்…
பெண் : உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்…

ஆண் : என் குலை வாழையே இலை போடவா…
ஏன் இன்னும் தாமதம்…

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு…
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு…

பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு…
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு…

குழு : தன தந்தன தந்தன தானா…
தன தந்தன தந்தன தானா…
தன தந்தன தந்தன தானா…
தன தந்தன தந்தன தானா…

—BGM—

பெண் : மாரோடு பள்ளி கொள்ள…
தோளோடு பின்னி கொள்ள…
கண்ணா என் நெஞ்சு குழி காயுதே…

ஆண் : உன்னை வேரோடு அள்ளி கொள்ள…
காம்போடு கிள்ளி கொள்ள…
கண்ணே என் கையிரண்டும் தாவுதே…

பெண் : உங்க பூ மாலை தாங்கி கொள்ள…
பொன் தாலி வாங்கி கொள்ள…
இப்போது என் கழுத்து ஏங்குதே…

ஆண் : உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள…
அச்சாரம் இட்டு கொள்ள…
எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே…

பெண் : அட மச்சானே இன்னும் என்ன பேச்சு…
ஆண் : அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு…

பெண் : குயில் உன் பேரையும் என் பேரையும்…
ஒண்ணாக கூவிச்சு…

ஆண் : அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு…
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு…

பெண் : ஏய்… ஐயா கண்ணு ஐயா கண்ணு…
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு…

ஆண் : என் கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு…
குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு…

பெண் : ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு…
மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு…

—BGM—


Notes : Meena Ponnu Song Lyrics in Tamil. This Song from Nattamai (1994). Song Lyrics penned by Vairamuthu. மீனா பொண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading