திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாஆசை

Thiloththama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…

—BGM—

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே…
குழு : என்ன…

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே…
குழு : என்ன…

ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
என் போ் இப்போது மறந்து போனதே…
குழு : என்ன…

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே…
குழு : என்ன…

—BGM—

ஆண் : ஓஹோ… ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே…
அது பிாிவதில்லை…

பெண் : ஓஹோ… ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே…
சொல்லும் அறிவதில்லை…

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

—BGM—

ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்…
குழு : இல்லை…

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
கனவே இல்லாமல் நிலவு என்பதே…
குழு : இல்லை…

ஆண் : தண்ணீா் இல்லாமல் எந்த மீனும்…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
தலைவி இல்லாமல் காதல் காவியம்…
குழு : இல்லை…

பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்…
குழு : இல்லை…

ஆண் : ஓஹோ… இந்த இயற்கையெல்லாம்…
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன…

பெண் : ஓஹோ… இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்…
இதில் கலக்கமென்ன…

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…

—BGM—


Notes : Thiloththama Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading