இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சின்மயிஏ.ஆர்.ரகுமான்கோச்சடையான்

Idhayam Song Lyrics in Tamil


பெண் : செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும்…
மயிலின் முட்டையாய்…

BGM

பெண் : நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து…
வெள்ளச் சுழியில் விழுந்து மலராய்…

BGM

பெண் : இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

பெண் : இதயம் கரைகள் மறந்து…
திசைகள் தொலைந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

ஆண் : பூப்பது மறந்தன கொடிகள்…
புன்னகை மறந்தது மின்னல்…
காய்ப்பது மறந்தது காடு…
காவியம் மறந்தது ஏடு…

ஆண் : பூப்பது மறந்தன கொடிகள்…
புன்னகை மறந்தது மின்னல்…
காய்ப்பது மறந்தது காடு…
காவியம் மறந்தது ஏடு…

பெண் : ஏனோ… ராணா ராணா…

ஆண் : யானோ நின்னை மறக்கினேன்…
நின்னை மறக்கினேன்…
நின்னை மறக்கினேன்…

BGM

பெண் : இதயம் நழுவி நழுவி…
நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே…
ஏனோ சொல் ஏனோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…
ஏனோ சொல் சொல்…
ஏனோ சொல்வாயோ…

ஆண் : செந்தமிழ் பிரியும் சங்கம்…
செங்கடல் பிரியும் அலைகள்…
ஒலியைப் பிரியும் காற்று…
உளியைப் பிரியும் சிற்பம்…

ஆண் : செந்தமிழ் பிரியும் சங்கம்…
செங்கடல் பிரியும் அலைகள்…
ஒலியைப் பிரியும் காற்று…
உளியைப் பிரியும் சிற்பம்…

பெண் : வாசத்துக்கேது சிறைவாசம்…

ஆண் : யானோ நின்னைப் பிரிகினேன்…
பிரிகினேன் பிரிகினேன்…
யானோ நின்னைப் பிரிகினேன்…
பிரிகினேன் பிரிகினேன்…

பெண் : சிறைகோட்டு பெரும்பயம் தூங்கி யாங்கு…
என் உயிரோ சிறிதே…
காதலோ பெரிதே…


Notes : Idhayam Song Lyrics in Tamil. This Song from Kochadaiiyaan (2014). Song Lyrics penned by Vairamuthu. இதயம் பாடல் வரிகள்.


Scroll to Top