எங்கே போகுதோ வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்கோச்சடையான்

Engae Pogudho Vaanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கே போகுதோ வானம்…

—BGM—

ஆண் : எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…

—BGM—

ஆண் : எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…

குழு : வாழ்வில் மீண்டாய்…
வையம் வென்றாய்…
எல்லை உனக்கில்லை தலைவா…

ஆண் : காற்றின் பாடல்கள் என்றுமே தீராது…
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது… ஓயாது…

ஆண் : ஹே… உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு…
ஹோஹோஹே… எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு…

ஆண் : ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்…
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்…
காடு தடுத்தால் காற்றாய்ப் போவோம்…
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்…

குழு : தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்…
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்…

ஆண் : இலட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா…
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா…

—BGM—

ஆண் : எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…

குழு : வாழ்வில் மீண்டாய்…
வையம் வென்றாய்…
எல்லை உனக்கில்லை தலைவா…

—BGM—

ஆண் : எந்தன் வில்லும்…
சொல்லிய சொல்லும்…
எந்த நாளும் பொய்த்ததில்லை…

குழு : இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு…
தீரா வைரம் உன் நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்…
வெற்றி உன்னை வந்து கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்…

ஆண் : உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு எழுந்துவிட்டேன்…
வாழ்த்திய மணங்களுக்கு என் வாழ்க்கையே வழங்கிவிட்டேன்…

ஆண் : ஹே… உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு…
ஹோஹோஹே… எனது தோழா நம் தாய்நாட்டைப் பொன்னாக்கு…

—BGM—

ஆண் : எங்கே போகுதோ வானம்…
அங்கே போகிறோம் நாமும்…

குழு : வாழ்வில் மீண்டாய்…
வையம் வென்றாய்…
எல்லை உனக்கில்லை தலைவா…

ஆண் : காற்றின் பாடல்கள் என்றுமே தீராது…
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது… ஓயாது…

—BGM—


Notes : Engae Pogudho Vaanam Song Lyrics in Tamil. This Song from Kochadaiiyaan (2014). Song Lyrics penned by Vairamuthu. எங்கே போகுதோ வானம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading