மணமகனின் சத்தியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & லதா ரஜினிகாந்த்ஏ.ஆர்.ரகுமான்கோச்சடையான்

Manamaganin Sathiyam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன்…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…
மாலை சூடிய காலை கதிரின் மேலே…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…

ஆண் : ஒரு குழந்தை போலே…
ஒரு வைரம் போலே…
தூய்மையான என் சத்தியம் புனிதமானது…

—BGM—

ஆண் : இப்பிறவியில் இன்னொரு பெண்ணை…
சிந்தையிலும் தொடேன்…
பிறிதோர் பக்கம் மனம் சாயா…
பிரியம் காப்பேன்…

ஆண் : செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து…
சேவை செய்வேன்…
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து…
நித்தம் எழுவேன்…

ஆண் : கை பொருள் யாவையும் கரைத்தாலும்…
கணக்கு கேளேன்…
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்…
உன்னிடம் தோற்பேன்…

ஆண் : கண்ணீா் கனியே உன்னை கை விடமாட்டேன்…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…
மாலை சூடிய காலை கதிரின் மேல…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…

—BGM—

ஆண் : அர்த்த ஜாம திருடன் போல…
அதிர்ந்து பேசேன்…
காமம் தீரும் பொழுதும்…
எந்தன் காதல் தீரேன்…

ஆண் : மாத மலர்ச்சி மறையும் வயதில்…
மார்பு கொடுப்பேன்…
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்…
தாய் மடியாவேன்…

ஆண் : சுவாசம் போல அருகில் இருந்து…
சுகப்பட வைப்பேன்…
உந்தன் உறவை எந்தன் உறவாய்…
நெஞ்சில் சுமப்பேன்…

ஆண் : உன் கனவுகள் நிஜமாக என்னையே தருவேன்…
உன் வாழ்வு மண்ணில் நீள என் உயிர் தருவேன்…

ஆண் : கெட்டி மேளம்… கெட்டி மேளம்…

—BGM—

பெண் : காதல் கனவா உந்தன் கரம் விட மாட்டேன்…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…
தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே…
சத்தியம் சத்தியம் இது சத்தியமே…

பெண் : ஒரு குழந்தை போலே…
ஒரு வைரம் போலே…
தூய்மையான என் சத்தியம் புனிதமானது…
தூய்மையான என் சத்தியம் புனிதமானது…


Notes : Manamaganin Sathiyam Song Lyrics in Tamil. This Song from Kochadaiiyaan (2014). Song Lyrics penned by Vairamuthu. மணமகனின் சத்தியம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading