பூவே வாய் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திரா & மகாலட்சுமி ஐயர்ஹாரிஸ் ஜெயராஜ்12பி

Poove Vai Pesum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

—BGM—

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…

—BGM—

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

—BGM—

பெண் : பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே…
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே…

பெண் : காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்…
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்…

பெண் : உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…
உன் சுவாச பாதையில்…
நான் சுற்றி திருகுவேன்…

ஆண் : என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்…
என்ன நான் சொல்வேன்…

—BGM—

பெண் : பூவே வாய் பேசும்போது…
காற்றே ஓடாதே நில்லு…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு…
காற்றே நல் வார்த்தை சொல்லு…

—BGM—

பெண் : நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை…
நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை…

பெண் : நேசத்தினால் என்னை கொன்றிவிடு…
உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு…

பெண் : என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…
என் நினைவு தோன்றினால்…
துளி நீரை சிந்திடு…

ஆண் : அட நூறு காவியம் சொல்லி தோற்றது…
என்று நீ சொல்வது…

—BGM—

பெண் : பூவே வாய் பேசும்போது… ஹ்ம்ம்…
காற்றே ஓடாதே நில்லு… ஹ்ம்ம்…
பூவின் மொழி கேட்டுக்கொண்டு… ஹ்ம்ம்…
காற்றே நல் வார்த்தை சொல்லு… ஹ்ம்ம்…

பெண் : குளிர் வார்த்தை சொன்னால்…
கொடியோடு வாழ்வேன்…
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்…
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்…
மன்றாடுவேன்…


Notes : Poove Vai Pesum Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. பூவே வாய் பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading