பெத்து எடுத்தவதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமலேசியா வாசுதேவன்இளையராஜாவேலைக்காரன் (1987)

Pethu Eduthavathaan Song Lyrics in Tamil


ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

—BGM—

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
தத்து கொடுத்துப்புட்டா…

—BGM—

ஆண் : வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை…
மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை…
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை…
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை…

ஆண் : தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை…
தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை…
கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல…
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை…

ஆண் : சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்…
காவிரி கங்கை ஆறுகள் போல…
கண்களும் இங்கே நீராட…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

—BGM—

ஆண் : தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே…
தலையில எழுதிவச்ச அந்த விரல் பார்த்தேனா…
கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது…
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது…

ஆண் : சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே…
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே…
சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே…
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே…

ஆண் : ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு…
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு…
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே…
காட்டுங்க எங்க தாய்ப்போல…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…


Notes : Pethu Eduthavathaan Song Lyrics in Tamil. This Song from Velaikaran (1987). Song Lyrics penned by Mu. Metha. பெத்து எடுத்தவதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading