தோட்டத்துல பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சாய்பாபாஇளையராஜாவேலைக்காரன் (1987)

Thottathile Pathi Katti Song Lyrics in Tamil


ஆண் : தன்னனான தந்தான்னா…
தன்னனான தந்தான்னா…

BGM

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } * (2)

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

BGM

{ ஆண் : சிங்காரமா ஊரு…
இது சென்னையினு பேரு…
ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு… } * (2)

ஆண் : தொட்டாலும் கை மணக்கும்…
தொட்ட இடம் பூ மணக்கும்…
கூவமுன்னு பேரு சொன்னா…
சொன்னவங்க வாய் மணக்கும்…

ஆண் : கண்ணகி இங்க வந்தா…
கண்ணடிக்கும் கூட்டமுங்க…
மதுரைய எரிச்சவளே…
மனசு மாற கூடுமுங்க…

ஆண் : நித்தமும் வீதியில் ஊர்வலமா…
சத்தமும் சண்டையும் சம்மதமா…
நித்தமும் வீதியில் ஊர்வலமா…
சத்தமும் சண்டையும் சம்மதமா…

ஆண் : புத்தனும் இப்போ பட்டணம் வந்தா…
போதை மரத்துல ஏறிக்குவான்…

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } (2)

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

BGM

{ ஆண் : கல்லூரிக்கு போனா…
கன்னி பொண்ணு மீனா…
கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா… } (2)

ஆண் : கட்சிகளும் வாங்கி இங்கே…
கட்டிடங்கள் வச்சிருக்கு…
கஷ்ட படும் ஏழைக்கெல்லாம்…
கட்டாந்தரை தான் இருக்கு…

ஆண் : கல்யாண மண்டபங்கள் கட்டி வச்சு காத்திருக்கு…
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு…

ஆண் : இன்னமும் கதைய சொல்லட்டுமா…
குப்பைய கூடையில் அள்ளட்டுமா…
இன்னமும் கதைய சொல்லட்டுமா…
குப்பைய கூடையில் அள்ளட்டுமா…

ஆண் : சொல்வது ஒன்னு…
செய்வது ஒன்னு…
பட்டணம் கைகளை சுட்டதானே…

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } (2)

BGM


Notes : Thottathile Pathi Katti Song Lyrics in Tamil. This Song from Velaikaran (1987). Song Lyrics penned by Mu. Metha. தோட்டத்துல பாத்தி கட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading