தென்றலது உன்னிடத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Thendraladhu Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : ச க ம ப க ம க ச…
நி ச நி பக ம நி ப ச…
க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச ச… } * 2

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

—BGM—

ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…

பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…

ஆண் : இதுவரை கனவுகள்…
இளமையின் நினைவுகள்…
ஈடேறும் நாளின்றுதான்…

பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்…
என்னாசை உன்னோடுதான்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

—BGM—

பெண் : சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…

ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…

பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்…
ஆனந்த நீராடுவோம்…

ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்…
ஏகாந்தம் நாம் பாடுவோம்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
ஆண் & பெண் : காவியம் தந்ததோ…


Notes : Thendraladhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kannadasan. தென்றலது உன்னிடத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading