தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

—BGM—

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

—BGM—

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

—BGM—

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

—BGM—

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading