தீரா காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசத்ய பிரகாஷ்ஜஸ்டின் பிரபாகரன்மான்ஸ்டர்

Theera Kadhal Song Lyrics in Tamil


ஆண் : தீரா காதல் காண கண்டேனே…
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே…
காலம் நேரம் மாற கண்டேனே… ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே…

ஆண் : கனவே நனவாய் எழுந்தாயே…
மனமே இறகாய் பறந்தாயே…

ஆண் & குழு (பெண்கள்) : தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ…
தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ… ஆ…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுறு சுறு சுறு அணிலை…
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்…
சிறு சிறு சிறு உணவாய்…
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்…

ஆண் : அடுப்பறையினில் பரவும்…
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்…
அருபெருஞ்சுடர் ஒளியில்…
தனி தனிமையை ரசித்திருப்பேன்…

ஆண் : நேற்று வானம் பூனை போலே…
ஓடி ஒழிகின்றதே…
ஈசி சேரில் சாய்ந்து கொண்டே…
காலம் சிரிக்கின்றதே…

ஆண் & குழு (பெண்கள்) : வாழ்க்கை வந்து வீடும் வந்ததே…
எனதேக்கம் செங்கல் தோட்டம் கொண்டதே…

ஆண் & குழு (பெண்கள்) : தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ…
தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ… ஆ…

—BGM—

ஆண் : அதிகாலையை அழைத்து…
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்…
சுவர்கோழியின் ஒளியை…
பெரும் இசையென லயித்திருப்பேன்…

ஆண் : தரை விழுகிற ஒளி மேல்…
சிறு நிழல் என படுத்திருப்பேன்…
நரை விழுகிற வரையில்…
இந்த அறைகளை ரசித்திருப்பேன்…

ஆண் : தூறல் யாவும் தீர்ந்த போதும்…
ஈரப்பதம் உள்ளதே… ஏ… ஏ…
காலம் யாவும் காண காண…
காட்சியாகின்றதே…

ஆண் & குழு (பெண்கள்) : காத்திருப்பில் ஜீவன் உள்ளதே… ஏ…
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே…

ஆண் & குழு (பெண்கள்) : தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ…
தாரே ரா… தாரே ரா…
தாரே ரா… தாரே ரா… ஆ… ஆ…

ஆண் : தீரா காதல் காண கண்டேனே…
அது தேடல் யாவும் தீர கண்டேனே…
காலம் நேரம் மாற கண்டேனே… ஏ…
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே…


Notes : Theera Kadhal Song Lyrics in Tamil. This Song from Monster (2019). Song Lyrics penned by Karthik Netha. தீரா காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading