பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | சர்தக் கல்யாணி & மீரா சென்குப்தா | ஏ.ஆர்.ரகுமான் | கோப்ரா |
Tharangini Song Lyrics in Tamil
குழு (ஆண்கள்) : தரங்கினி தரங்கினி…
கிணிணி கினி கினினி…
தரங்கினி தரங்கினி…
தரண தரங்கினி…
குழு (ஆண்கள்) : தரங்கினி தரங்கினி…
கிணிணி கினி கினினி…
தரங்கினி தரங்கினி…
தரண தரங்கினி…
ஆண் : தரங்கினி தரங்கினி…
தனிமையில் விடாதவள் இவள்…
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள்…
இவளே இனிமையின் இன்னோர் துகளே…
ஆண் : முதல் முதல் உணரும் அன்பால்…
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்…
அழகி என் அருகில் வந்தாள்…
ஆறறிவும் தேயும் தன்னால்…
புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால்…
ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி…
கரையும் எனது மனம் உருகி உருகி…
இருந்தாலும் இதுவே மருகி மருகி…
தொடரும் அடிமனதில் மருகி மருகி…
ஆண் : கலங்கரை விளக்காய் வந்தாள்…
காரிருளில் தூணாய் நின்றாள்…
மயிலிறகு பார்வை கொண்டாள்…
மாமழையும் தானே தந்தாள்…
குழு (ஆண்கள்) : தரங்கினி தரங்கினி…
கிணிணி கினி கினினி…
தரங்கினி தரங்கினி…
தரண தரங்கினி…
—BGM—
ஆண் : தினம் தினம் உன்னை திருடி செல்ல…
விழித்திருந்தேன் விடியல் வரை…
கனவுகள் என்னும் வலை விரித்தேன்…
அதுவல்லவோ விமல சிறை…
ஆண் : கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு…
உயிரில் விரலால் நீ கீற…
புரளும் நதியாய் நான் மீற…
போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ…
குழு (ஆண்கள்) : தரங்கினி தரங்கினி…
கிணிணி கினி கினினி…
தரங்கினி தரங்கினி…
தரண ண தரங்கினி…
ஆண் : முதல் முதல் உணரும் அன்பால்…
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்…
அழகி என் அருகில் வந்தாள்…
ஆறறிவும் தேயும் தன்னால்…
புதையலே பூமியை கீறி தேடி வரும் முன்னால்…
ஆண் : அனல்மேலே பனியாய் உருகி உருகி…
கரையும் எனது மனம் உருகி உருகி…
இருந்தாலும் இதுவே மருகி மருகி…
தொடரும் அடிமனதில் மருகி மருகி…
குழு (ஆண்கள்) : தரங்கினி தரங்கினி…
கிணிணி கினி கினினி…
தரங்கினி தரங்கினி…
தரண தரங்கினி…
Notes : Tharangini Song Lyrics in Tamil. This Song from Cobra (2022). Song Lyrics penned by Thamarai. தரங்கினி பாடல் வரிகள்.