தப்பு தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாவேத் அலி & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாஆதலால் காதல் செய்வீர்

Thappu Thanda Vayasu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…

ஆண் : தொட்டா மோகம் விட்டாப் போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…

ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்…
உன் மெய்யில் இருக்கிறது…
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்…
இன்னும் பசிக்கிறதே…
உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென…
என்னை உடுத்திவிடு அன்பே…

பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…

பெண் : தொட்டா மோகம் விட்டா போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…

—BGM—

ஆண் : உதடு கேட்குது உனது மேனியில்…
ஈர ஓவியம் தீட்ட…
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…

பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்…
உன் எச்சில் கவிதைகள் ஊர…
எழுது காதலாய் எனக்கு சம்மதம்தான்…

ஆண் : என் தோழியே தோல்கள் இருக்கு நீ சாய…
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும் வியர்வைப் பாய… ஹோ…

—BGM—

ஆண் : உனது நூலிழை எனது நூலகம்…
எடுத்து வாசிப்பேன் அன்பே…
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…

பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்…
புறத்தில் வைத்திடு அன்பே…
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே…

ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது…
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும் மாது…
ஹோஹோ ஹோஹோ…

—BGM—

ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்…
உன் மெய்யில் இருக்கிறது…
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்…
இன்னும் பசிக்கிறதே…
உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென…
என்னை உடுத்திவிடு அன்பே…


Notes : Thappu Thanda Vayasu Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Vaali. தப்பு தண்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading